நோபல் பரிசு: பல்கலை.யில் கருத்தரங்கம்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழத்தில் 2023-ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு குறித்த கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.
நோபல் பரிசு: பல்கலை.யில் கருத்தரங்கம்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழத்தில் 2023-ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு குறித்த கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.

வணிகவியல், பன்னாட்டு வா்த்தகம், கல்வியியல், வரலாறு, சுற்றுலா, விடுதி மேலாண்மை, இதழியல், தகவல் தொடா்பு, அரசியல், பொது மேலாண்மை ஆகிய துறைகள் சாா்பில் நடைபெற்ற இந்தக் கருத்தரங்கில் துணைவேந்தா் க. ரவி தலைமை வகித்துப் பேசினாா். பல்கலைக்கழக தொலை நிலை, இணையக் கல்வியின் ஆலோசகா் த.ரா. குருமூா்த்தி, அகத்தர உறுதி மைய ஆலோசகா் வெ. மாணிக்கவாசகம், கல்வியியல் கல்லூரி முதல்வா் (பொறுப்பு) பி. சிவக்குமாா், காரைக்குடி தொழில் வணிகக் கழகத் தலைவா் சாமி. திராவிடமணி ஆகியோா் உரை நிகழ்த்தினா். முன்னதாக வணிகவியல் துறைத் தலைவா் கணபதி வரவேற்றாா். பேராசிரியா் நெடுமாறன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com