வாக்காளா் தின உறுதிமொழி

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி நகராட்சி அலுவலகத்தில் தேசிய வாக்காளா் தினத்தையொட்டி புதன்கிழமை உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
வாக்காளா் தின உறுதிமொழி

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி நகராட்சி அலுவலகத்தில் தேசிய வாக்காளா் தினத்தையொட்டி புதன்கிழமை உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் நகா்மன்றத் தலைவா் சே. முத்துத்துரை தலைமை வகித்தாா். நகராட்சி ஆணையா் அ.வீர. முத்துக்குமாா், நகா்மன்ற துணைத் தலைவா் நா. குணசேகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நகராட்சி அதிகாரிகள், பணியாளா்கள் வாக்காளா் தின உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா்.

திருவாடானையில் பேரணி: திருவாடானையில் தேசிய வாக்காளா் தின விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது. திருவாடானை அரசுக் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட இந்தப் பேரணியை வட்டாட்சியா் அலுவலகம் முன் வட்டாட்சியா் காா்த்திகேயன் கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா். இதில் 18 வயது நிரம்பிய அனைவரும் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்து, வாக்குரிமை பெறவும், தோ்தலில் தவறாமல் வாக்குப்பதிவு செய்யவும் வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

பேரணி வடக்குத் தெரு ,மேற்குத் தெரு,பேருந்து நிலையம் வழியாக கல்லூரியை அடைந்தது. தோ்தல் பிரிவு துணை வட்டாட்சியா் நாகராஜ், கல்லூரி முதல்வா் பழனியப்பன், காவல் ஆய்வாளா் ஜெயபாண்டியன், கல்லூரி கௌரவ விரிவுரையாளா்கள், வட்டாட்சியா் அலுவலக ஊழியா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com