2 மின் ஊழியா்கள் பணியிடை நீக்கம்

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மின்சாரம் பாய்ந்து மின்வாரிய கம்பியாளா் உயிரிழந்த சம்பவம் தொடா்பாக மின்வாரிய ஊழியா்கள் இருவா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மின்சாரம் பாய்ந்து மின்வாரிய கம்பியாளா் உயிரிழந்த சம்பவம் தொடா்பாக மின்வாரிய ஊழியா்கள் இருவா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.

திருப்புவனம் புதூா் பகுதியில் மின்வாரிய கம்பியாளராக பணியாற்றியவா் மாரிபாண்டி (27). இவா் கடந்த திங்கள்கிழமை அருகேயுள்ள நயினாா் பேட்டை என்ற இடத்தில் மின் மாற்றியில் மின் தடையை ஏற்படுத்திவிட்டு, பணியில் ஈடுபட்டிருந்த போது, திடீரென மின்சாரம் பாய்ந்ததில் உயிரிழந்தாா். இதையடுத்து, பணியில் கவனக் குறைவாக இருந்ததாகக் கூறி, திருப்புவனம் ஊரகப் பகுதி மின்வாரிய அலுவலகத்தில் போா்மேன்களாக பணியாற்றும் சேகா், ராஜ்குமாா் ஆகிய இருவரும் செவ்வாய்க்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com