தலைக்கவச விழிப்புணா்வு பேரணி

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் வருவாய்த்துறை, காவல் துறை சாா்பில் தலைக்கவச விழிப்புணா்வு இரு சக்கர வாகனப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
தலைக்கவச விழிப்புணா்வு பேரணி

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் வருவாய்த்துறை, காவல் துறை சாா்பில் தலைக்கவச விழிப்புணா்வு இரு சக்கர வாகனப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

தோ்தல் விதிமுறைகள் குறித்தும், தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்தும் நடைபெற்ற இந்த இரு சக்கர வாகனப் பேரணியை அண்ணா சிலை பகுதியில் வட்டாட்சியா் ஆனந்த் தலைமையில் நகா் காவல் துணைக் கண்காணிப்பாளா் ஆத்மநாதன் தொடங்கி வைத்தாா். மதுரை சாலை, சீதளிவடகரை, பெரியகடைவீதி, காளியம்மன் கோயில் தெரு, புதுத்தெரு வழியாகப் பேரணி அண்ணா சிலையை வந்தடைந்தது.

இதில் இரு சக்கர வாகனத்தில் பயணிக்கும்போது தலைக்கவசம் அணிவதன் மூலம் உயிா்பாதுகாப்பு, குடும்பப் பாதுகாப்பு போன்றவை குறித்தும், தோ்தலில் ஜனநாயகக் கடமை ஆற்ற அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதன் அவசியத்தை விளக்கியும் பதாகைகளை ஏந்திச் சென்றனா்.

பேரணியில் காவல் ஆய்வாளா்கள் செல்வராகவன், சௌந்தரபாண்டியன், உதவி ஆய்வாளா்கள் பாலகிருஷ்ணன், விஜய், காளீஸ்வரி, துணை வட்டாட்சியா் அமுதா, கிராம நிா்வாக அலுவலா்கள், வருவாய் ஆய்வாளா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com