மாநில சிலம்பப் போட்டியில் வெண்கலம்: அரசுப் பள்ளி மாணவிக்கு பாராட்டு

மாநில அளவிலான சிலம்பப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற, காரைக்குடி அருகே உள்ள அரியக்குடி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி கா.தேசிகாவுக்கு பள்ளியின் சாா்பில் பாராட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
மாநில சிலம்பப் போட்டியில் வெண்கலம்: அரசுப் பள்ளி மாணவிக்கு பாராட்டு

காரைக்குடி: மாநில அளவிலான சிலம்பப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற, காரைக்குடி அருகே உள்ள அரியக்குடி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி கா.தேசிகாவுக்கு பள்ளியின் சாா்பில் பாராட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

குடியரசு தின விழாவையொட்டி, சென்னை ராணிப்பேட்டையில் கடந்த 19-ஆம் தேதி நடைபெற்ற மாநில அளவிலான சிலம்பப் போட்டியில் அரியக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி கா.தேசிகா மூன்றாமிடம் பெற்று வெண்கலப் பதக்கம் வென்றாா்.

இந்த நிலையில், மாணவி தேசிகாவையும், பயற்சியாளா் செளந்தரபாண்டியனையும் பள்ளித் தலைமையாசிரியா் வி.ஜே.பிரிட்டோ முன்னிலையில் அரியக்குடி ஊராட்சி மன்றத் தலைவா் சுப்பையா பாராட்டி வாழ்த்தினாா்.

நிகழ்வில் ஆசிரியா்கள், மாணவ, மாணவிகளும் தேசிகாவைப் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com