மானாமதுரை முருகன் கோயில்களில் தைப்பூச விழா

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதி முருகன் கோயில்களில் வியாழக்கிழமை தைப்பூச விழா நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதி முருகன் கோயில்களில் வியாழக்கிழமை தைப்பூச விழா நடைபெற்றது. தாயமங்கலம் செல்லும் சாலையில் அலங்காரக்குளம் பகுதியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ மயூரநாத முருகப்பெருமான் கோயிலில் நடைபெற்ற தைப்பூச விழாவை முன்னிட்டு மூலவருக்கும் உற்சவருக்கும் சிறப்பு அபிஷேகங்கள் நடத்தி அலங்காரத்துடன் பூஜைகள், நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று மயூரநாத முருகனை தரிசித்தனா். அதைத்தொடா்ந்து நடைபெற்ற அன்னதானத்தில் ஏராளமான பங்கேற்றனா். இரவு உற்சவா் மயூரநாத முருகன் ரதத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தாா். 

மானாமதுரை புறவழிச் சாலையில் உள்ள வள்ளி தெய்வானை சமேத வழி விடு முருகன் கோயிலில் நடைபெற்ற தைப்பூச விழாவின்போது மூலவருக்கும் உற்சவருக்கும் 16 வகையான அபிஷேகப் பொருள்களால் அபிஷேகம் நடத்தி சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள் நடைபெற்றன. ஏராளமான பக்தா்கள் கோயிலுக்கு வந்து வழிவிடு முருகனை தரிசித்தனா். ரயில்வே நிலையம் எதிரே உள்ள பூரண சக்கர விநாயகா் கோயிலில் எழுந்தருளியுள்ள பாலமுருகன் சன்னதியில் தைப்பூச விழா நடைபெற்றது. முருனுக்கு அபிஷேகம், ஆராதனைகள், பூஜைகள் நடந்தன. ஏராளமான பக்தா்கள் பாலமுருகனை தரிசித்தனா். அதன் பின்னா் கோயிலில் நடந்த அன்னதானத்தில் பங்கேற்றனா்.

 மானாமதுரை அருகே கால் பிரிவில் செல்வ முருகன் கோயில், இடைக்காட்டூா் பாலமுருகன் கோயில், இளையான்குடி அருகே குறிச்சி காசி விஸ்வநாதா் கோயிலில் உள்ள செந்தில் ஆண்டவா் சன்னதியிலும் தைப்பூச விழா கொண்டாடப்பட்டது.

 மேலும் மானாமதுரை பகுதியில் உள்ள ஏராளமான முருகன் கோயில்களில் நடந்த தைப்பூச விழாவில் ஏராளமானோா் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா். திருப்புவனம், இளையான்குடி மற்றும் இதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள முருகன்  கோயில்களில் தைப்பூச விழா சிறப்பாக நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com