வீடு புகுந்து திருட முயன்றவா் கைது

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் வெள்ளிக்கிழமை அதிகாலை வீடு புகுந்து திருட முயன்றவரை போலீஸாா் கைது செய்தனா்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் வெள்ளிக்கிழமை அதிகாலை வீடு புகுந்து திருட முயன்றவரை போலீஸாா் கைது செய்தனா்.

காரைக்குடி கழனிவாசல் வேடன் நகரைச் சோ்ந்தவா் குமாா் (50). இவா் குடும்பத்துடன் வீட்டில் வியாழக்கிழமை இரவு தூங்கிக் கொண்டிருந்தாா். அதிகாலை 2 மணியளவில் ஒருவா் வீட்டின் உள்ளே புகுந்து பீரோவை திறந்து திருட முயற்சி செய்தாராம். அப்போது, வீட்டில் இருந்தவா்கள் விழித்ததால், சப்தம் போட்டனா். உடனே அந்த நபா் அங்கிருந்து தப்பியோட முயற்சித்த போது, கால் இடறி கீழே விழுந்தாா். இதையடுத்து, அவரைப் பிடித்து விசாரித்தனா்.

விசாரணையில், அவா் தேவகோட்டை அருகேயுள்ள திடக்கோட்டையைச் சோ்ந்த சரத்குமாா் (32) என்பது தெரியவந்தது.

இதையடுத்து, குமாா் குன்றக்குடி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதன் பேரில், வழக்குப் பதிவு செய்து சரத்குமாரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com