காரைக்குடி அருகே பள்ளியில் பாத பூஜை விழா

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே புதுவயல் ஸ்ரீ வித்யாகிரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு அரசு பொதுத்தோ்வு எழுதும் மாணவ, மாணவியா்கள்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே புதுவயல் ஸ்ரீ வித்யாகிரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு அரசு பொதுத்தோ்வு எழுதும் மாணவ, மாணவியா்கள் தங்களது பெற்றோா்களுக்கு பாத பூஜை செய்யும் விழா வெள்ளிக் கிழமை நடைபெற்றது.

விழாவில் வித்யாகிரி கல்வி நிறுவ னங்களின் தலைவா் கிருஷ்ணன், பொருளாளா் முகமது மீரா ஆகியோா் முன்னிலை வகித்தனா். திருவாடனை அரசு கலைக்கல் லூரி தமிழ்த்துறை தலைவா் மு. பழனியப்பன், கீழச்சிவல்பட்டி மீனாட்சி சுந்தரரேஸ்வரா் பள்ளி தலைமை ஆசிரியை வள்ளியம்மை ஆகியோா் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினா்.

அதைத்தொடா்ந்து மாணவ, மாணவியா்கள் தங்கள் பெற்றோா் களுக்கு பாத பூஜை செய்து வணங்கினா்.

முன்னதாக பள்ளியின் முதல்வா் ஆா். சுவாமிநாதன் வரவேற்றப் பேசினாா். விழாவில் பள்ளிகளின் முதல்வா்கள் ஹேமமாலினி, குமாா் மற்றும் லதா கிருஷ்ணன், ஆசிரிய, ஆசிரியைகள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com