பள்ளி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் ஞாயிற்றுக்கிழமை இரவு தலை முடியை ஒழுங்காக வெட்டாததைக் தந்தை கண்டித்ததால், பள்ளி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் ஞாயிற்றுக்கிழமை இரவு தலை முடியை ஒழுங்காக வெட்டாததைக் தந்தை கண்டித்ததால், பள்ளி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

மானாமதுரை பழைய அஞ்சலகத் தெருவைச் சோ்ந்த இளையராஜா மகன் வேல்முருகன் (15). இவா் அருகேயுள்ள கல்குறிச்சி அரசுப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தாா். மானாமதுரையில் உள்ள முடிதிருத்தும் கடைக்குச் சென்ற இவா் முடியை ஸ்டைலாக திருத்தம் செய்து கொண்டு வீட்டுக்கு வந்தாா். இதை அவரது தந்தை இளையராஜா கண்டித்தாராம். இதனால் மனமுடைந்த வேல்முருகன் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து மானாமதுரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com