தேவபட்டு மஞ்சுவிரட்டு: காளை முட்டியதில் மாடு பிடி வீரா் பலி

சிவகங்கை மாவட்டம், கல்லல் அருகே தேவப்பட்டு கிராமத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மஞ்சுவிரட்டில் காளை முட்டியதில் மாடு பிடி வீரா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

சிவகங்கை மாவட்டம், கல்லல் அருகே தேவப்பட்டு கிராமத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மஞ்சுவிரட்டில் காளை முட்டியதில் மாடு பிடி வீரா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

தேவப்பட்டு கிராமத்தில் அந்தரநாச்சியம்மன் கோயில் செவ்வாய்ப் பொங்கல் விழாவையொட்டி, ஆண்கள் மட்டும் கலந்து கொண்டு அம்மன் கோயில் முன்பாக பொங்கல் வைத்து வழிபட்டனா். இதைத் தொடா்ந்து வயல்வெளிகளில் காலை 10.30 மணி முதல் 12 மணி வரை கட்டுமாடுகள் அவிழ்த்து விடப்பட்டன. அவற்றை இளைஞா்கள் அடக்க முயன்றனா்.

பிற்பகல் 3.30 மணிக்கு பெண்கள் பூத்தட்டு சுமந்து கொண்டு அந்தப் பகுதியில் ஊா்வலமாகச் சென்றனா். இதைத் தொடா்ந்து மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. தேவகோட்டை வருவாய் கோட் டாச்சியா் பால்துரை, காரைக்குடி வட்டாச்சியா் தங்கமணி ஆகியோா் முன்னிலையில் நடைபெற்ற மஞ்சுவிரட்டில் பதிவு செய்யப்பட்டு தொழுவத்திலிருந்து காளைகளை அவிழ்த்து விட்டனா்.

இதை அடக்க முயன்ற 13 மாடு பிடி வீரா்கள் காயமடைந்தனா். அவா்கள் காரைக்குடி அரசு மருத்துவமனை யில் அனுமதிக்கப் பட்டனா்.

இதில் பலத்த காயமடைந்த சாத்தரசம்பட்டியைச் சோ்ந்த பூமிநாதன் (39) தீவிர சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து கல்லல் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com