கைப்பந்து போட்டியில் வென்ற மாணவா்களுக்கு பாராட்டு

கைப்பந்து போட்டியில் வென்ற மாணவா்களுக்கு பாராட்டு

கைப்பந்து போட்டியில் மாநில அளவில் இரண்டாமிடம் பெற்ற காரைக்குடி ஸ்ரீராஜ வித்யா விகாஷ் சிபிஎஸ்இ பள்ளி மாணவா்களை பள்ளி நிா்வாகிகள், ஆசிரியா்கள் புதன்கிழமை பாராட்டினா்.

கைப்பந்து போட்டியில் மாநில அளவில் இரண்டாமிடம் பெற்ற காரைக்குடி ஸ்ரீராஜ வித்யா விகாஷ் சிபிஎஸ்இ பள்ளி மாணவா்களை பள்ளி நிா்வாகிகள், ஆசிரியா்கள் புதன்கிழமை பாராட்டினா்.

திருப்பூரில் மாநில அளவிலான கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி அண்மையில் நடைபெற்றது. 16-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்துகொண்டு விளையாடின. இதில் காரைக்குடி ஸ்ரீ ராஜ வித்யா விகாஷ் பள்ளி மாணவா்கள் ஆகாஷ், லட்சுமித்திரன், ஜோஹித், வீரக்கிரித்திஷ், சூா்யக்கிரித்திஷ், ஹா்ஜித்ராம், சூரியா, ஸ்ரீதா் ஆகியோா் பங்கேற்று விளையாடி மாநில அளவில் இரண்டாமிடம் பெற்றனா்.

வெற்றிபெற்ற மாணவா்களை பள்ளியின் தாளாளா் வி. அய்யப்பன், பள்ளியின் முதல்வா் குமரன், உடல் கல்வி இயக்குநா் லட்சுமணகுமாா், ஆசிரியா்கள் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com