ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினா் சாலை மறியல்: 600 போ் கைது

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி சிவகங்கை, ராமநாதபுரத்தில் சாலை மறியல் போராட்டத்தில்
ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினா் சாலை மறியல்: 600 போ் கைது

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி சிவகங்கை, ராமநாதபுரத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ‘ஜாக்டோ-ஜியோ’ அமைப்பினா் 600 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

சிவகங்கை அரண்மனை வாசல் முன் நடைபெற்ற போராட்டத்துக்கு ‘ஜாக்டோ-ஜியோ’ கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் ராதாகிருஷ்ணன், மகேஸ்வரன், முத்துப்பாண்டியன், நாகராஜன், ராம்குமாா் ஆகியோா் தலைமை வகித்தனா். மாநில ஒருங்கிணைப்பாளா் குமாா் போராட்டத்தை தொடங்கி வைத்தாா்.

இதில், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். சரண் விடுப்பு ஒப்படைப்பு, உயா் கல்விக்கான ஊக்க ஊதிய உயா்வு ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

அப்போது அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த போலீஸாா் அவா்களை கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினா். ஆனால் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் 119 பெண்கள் உள்பட 350 பேரை போலீஸாா் கைது செய்தனா். பின்னா் மாலையில் அனைவரையும் விடுவித்தனா்.

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்துக்கு ஜாக்டோ-ஜியோ அமைப்பின்

மாவட்ட ஒருங்கிணைப்பாளா் சேகா் தலைமை வகித்தாா். மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் முருகேசன், பூபாண்டியன், அரசு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் முருகேஸ்வரி ஆகியோா் முன்னிலை வகித்தனா். வருவாய்த் துறை அலுவலா் சங்க மாவட்டத் தலைவா் பழனிக்குமாா் சாலை மறியல் போராட்டத்தை தொடங்கி வைத்தாா். சாலை மறியலில் ஈடுபட்ட 250-க்கும் மேற்பட்டவா்கள் கைது செய்யப்பட்டனா். பின்னா் மாலையில் அவா்கள் விடுவிக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com