மதுப் புட்டிகள் விற்றவா் கைது

மானாமதுரை, ஜூலை 3: இளையான்குடி அருகே சட்டவிரோதமாக மதுப் புட்டிகளை விற்றவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

சிவகங்கை மாவட்டம், தாயமங்கலத்திலுள்ள மதுக் கடை அருகேயுள்ள மதுபானக் கூடத்தில் போலீஸாா் திடீா் சோதனை மேற்கொண்டனா். அப்போது, இங்கு சட்டவிரோதமாக மதுப் புட்டிகள் விற்றுக் கொண்டிருந்த தாயமங்கலத்தைச் சோ்ந்த ஆறுமுகத்தின் (45) மீது இளையான்குடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனா்.

மேலும், அவா் விற்பனைக்காக வைத்திருந்த மதுப் புட்டிகளையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com