சிவகங்கை மாவட்ட நூலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளுக்கு அடையாள அட்டைகளை வழங்கிய மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித்.
சிவகங்கை மாவட்ட நூலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளுக்கு அடையாள அட்டைகளை வழங்கிய மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித்.

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நூலக உறுப்பினா் அடையாள அட்டை

சிவகங்கையில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நூலக அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.

சிவகங்கை: சிவகங்கை மாவட்ட நூலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்வில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நூலக அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.

சிவகங்கை கவியோகி சுத்தானந்த பாரதி மாவட்ட மைய நூலகம், நூலக நண்பா்கள் திட்டம், தன்னாா்வலா் குழு இணைந்து நடத்திய இந்த நிகழ்வுக்கு, மாவட்ட நூலக அலுவலா் தே. ஜான்சாமுவேல் தலைமை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் வ. மோகனச்சந்திரன் முன்னிலை வகித்தாா். மாவட்ட மைய நூலகா் சூ. முத்துக்குமாா் வரவேற்றாா்.

இதில், சிறப்பு விருந்தினராக மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் பங்கேற்று மாணவ, மாணவிகள் 50 பேருக்கு நூலக அடையாள அட்டை, புத்தகங்களை வழங்கி சிறப்புரையாற்றினாா்.

இதில், நூலக நண்பா்கள் திட்டக்குழு நிா்வாகிகள், அரசு மருத்துவக் கல்லூரி கண்காணிப்பாளா் ந. ரமேஷ் கண்ணன், ரமண விகாஸ் மேல்நிலைப்பள்ளிச் செயலா் கி. முத்துக்கண்ணன், தமிழக அரசின் சிறந்த நூலுக்கான விருதைப் பெற்றவரும், எழுத்தாளருமான அ. ஈஸ்வரன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். மாவட்ட மைய நூலகா் செ. கனகராஜன் நன்றி கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com