வேன் மோதியதில் உணவக உரிமையாளா் பலி

சிவகங்கை மாவட்டம், கீழச்சிவல்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் வேன் மோதியதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற உணவக உரிமையாளா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

கீழச்சிவல்பட்டி அருகே சேவிணிப்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் ஆண்டியப்பன் (52). இவா் கீழச்சிவல்பட்டி தேசிய நெடுஞ்சாலைப் பகுதியில் உணவகம் நடத்தி வந்தாா். இந்த நிலையில், சனிக்கிழமை தனது கடைக்கு விறகு வாங்கிக் கொண்டு சென்றாா். அப்போது தனது கடை அருகே திரும்பும் போது பின்னால் வந்த வேன் மோதியதில் பலத்த காயமடைந்த ஆண்டியப்பன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து கீழச்சிவல்பட்டி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com