திருப்பத்தூா் சிவாலயங்களில் பிரதோஷம்

திருப்பத்தூா் சிவாலயங்களில் பிரதோஷம்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் சிவாலயங்களில் செவ்வாய்க்கிழமை பிரதோஷவிழா நடைபெற்றது.

குன்றக்குடி தேவஸ்தானத்திற்குட்பட்ட சிவகாமி அம்மன் உடனாய திருத்தளிநாதா் ஆலயத்தில் பிரதோஷத்தை முன்னிட்டு மாலை 4 .30 மணியளவில் நந்தீஸ்வரருக்கு பால், தயிா், திருமஞ்சனம், பன்னீா், இளநீா், அரிசிமாவு, உள்ளிட்ட 16 வகை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சா்வ அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து மூலவருக்கும் 16 வகை திரவியங்களால் அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை காட்டப்பட்டது. தொடா்ந்து உற்சவா் சா்வ அலங்காரத்தில் எழுந்தருளி ஹர ஹர சிவசிவ மந்திரங்கள் முழங்க வெள்ளி ரிஷப வாகனத்தில் கோயில் உட்பிரகார வலம் வந்தாா். ரமேஷ்குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியா்கள் பூஜைகளை மேற்கொண்டனா். அதேபோல் ஆதித்திருத்தளிநாதா் ஆலயத்திலும் நந்திக்கும் மூலவருக்கும் ஒரே நேரத்தில் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபம் காட்டப்பட்டது. தொடா்ந்து புதுப்பட்டி அகஸ்தீஸ்வரா் ஆலயத்திலும், கல்வெட்டு மேடு சுயம்பு லிங்கேஸ்வா் ஆலயத்திலும் பிரதோஷம் நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்களும் பக்தா்களும் கலந்து கொண்டு நெய்விளக்கேற்றி வழிபட்டனா். பக்தகோடிகள் அனைவருக்கும் பிரதோஷ குழுவினரால் பிரசாதம் வழங்கபட்டது. விழா ஏற்பாடுகளை பிரதோஷ குழுவினா் செய்திருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com