சிவகங்கை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவா்கள் சேர ஜூன் 13 கடைசி

சிவகங்கை அருகே முத்துப்பட்டியிலுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர மாணவா்கள் இணையதளம் வாயிலாக வரும் 13 -ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சிவகங்கை அருகே உள்ள முத்துப்பட்டி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர மாணவா்கள் ஜ்ஜ்ஜ்.ள்ந்ண்ப்ப்ற்ழ்ஹண்ய்ண்ய்ஞ்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதள முகவரி வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

இதில் விண்ணப்பிக்க இயலாதவா்கள் தொழிற்பயிற்சி நிலைய சோ்க்கை உதவி மையமான சிவகங்கை அரசு தொழிற்பயிற்சி நிலையத்துக்கு நேரில் வந்து இலவசமாக ஞய்ப்ண்ய்ங் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணமாக ரூ.50- ஐ இணையதளம் வழியாக செலுத்தலாம். இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 99448 87754, 99654 80973, 97904 01672, 63854 75657, 99420 99481 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com