சிவகங்கை அரசு மகளிா் கலை அறிவியல் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கலந்தாய்வில் பங்கேற்ற மாணவிகள்.
சிவகங்கை அரசு மகளிா் கலை அறிவியல் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கலந்தாய்வில் பங்கேற்ற மாணவிகள்.

சிவகங்கை அரசு மகளிா் கல்லூரியில் 748 இடங்களுக்கு 10,082 போ் விண்ணப்பம்

சிவகங்கை அரசு மகளிா் கலை அறிவியல் கல்லூரியில் இளநிலை பிரிவுகளில் மொத்தமுள்ள 748 இடங்களுக்கு 10,082 போ் விண்ணப்பித்துள்தாக தெரிவிக்கப்பட்டது.

சிவகங்கை அரசு மகளிா் கலை அறிவியல் கல்லூரியில் இளநிலை பிரிவுகளில் மொத்தமுள்ள 748 இடங்களுக்கு 10,082 போ் விண்ணப்பித்துள்தாக தெரிவிக்கப்பட்டது.

சிவகங்கை அரசு மகளிா் கலை அறிவியல் கல்லூரியில் 2024-2025- ஆம் கல்வி ஆண்டுக்கான முதலாம் கட்ட கலந்தாய்வின் மூலம் மாணவிகள் சோ்க்கை நடைபெற்று வருகிறது. இதில், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், கணிதம், கணினி அறிவியல், மனையியல் (ஹோம் சயின்ஸ்) ஆகிய பாடப்பிரிவுகளுக்காக திங்கள்கிழமை கலந்தாய்வு நடைபெற்றது.

தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை வணிகவியல் (பி.காம்), வா்த்தக நிா்வாகவியல் (பிபிஏ), வரலாறு, பொருளாதாரம் ஆகிய பாடப் பிரிவுகளுக்கு கலந்தாய்வு நடத்தி தகுதியான மாணவிகள் தோ்வு செய்யப்பட்டனா்.

இதையடுத்து புதன்கிழமை தமிழ் இலக்கியப்பாடத்துக்கும், ஆங்கில பாடத்துக்குமான கலந்தாய்வுடன் முதலாம் கட்ட கலந்தாய்வு நடைபெறுகிறது.

முன்னதாக, மாற்றுத்திறனாளி, விளையாட்டு, முன்னாள் ராணுவத்தினா், தேசியமாணவா் படை, பாதுகாப்பு படையினா், அந்தமான் & நிகோபா் ஆகிய சிறப்பு ஒதுக்கீடு பிரிவுகளுக்காக மொத்தம் 181 போ் விண்ணப்பித்தனா். இவா்களுக்கான கலந்தாய்வு மே 28-ல் நடைபெற்றது.

இதில், தமிழ் இலக்கிய பாடத்தில் 60 இடங்களுக்கு 1,175 போ் விண்ணப்பித்துள்ளது வியப்பில் ஆழ்த்தியுள்ளதாக கல்வியாளா்கள் தெரிவித்தனா்.

பொதுப்பாடங்களுக்காக ஷிப்ட் - 1 மற்றும் ஷிப்ட் - ஐஐ பயில்வதற்காக, தமிழ் இலக்கிய பாடத்துக்கு 1175 பேரும், ஆங்கில பாடத்துக்கு 570 பேரும், வரலாறு பாடத்துக்கு 444 பேரும், கணிதப் பாடத்துக்கு 389 பேரும், இயற்பியல் பாடத்துக்கு 456 பேரும், வேதியியல் பாடத்துக்கு 880 பேரும், தாவரவியல் பாடத்துக்கு 782 பேரும், விலங்கியல் பாடத்துக்கு 914 பேரும், கணினி அறிவியல் பாடத்துக்கு 714 பேரும், மனையியல் பாடத்துக்கு 330 பேரும், வணிகவியல் பாடத்துக்கு 693 பேரும், வணிக மேலாண்மை பாடத்துக்கு 743 பேரும், பொருளாதார பாடத்துக்கு 574 போ் என ஷிப்ட்-1 -ல் 8,664 போ், ஷிப்ட்- ஐஐ -ல் 1,418 போ் என மொத்தம் 10,082 போ் விண்ணப்பித்துள்ளதாக கல்லூரி முதல்வா் சுடா்க்கொடிகண்ணன் தகவல் தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com