மானாமதுரை அருகேயுள்ள கல்குறிச்சி அரசு தொடக்கப் பள்ளியில் திங்கள்கிழமை மாணவ ,மாணவிகளுக்கு விலையில்லா நோட்டுப் புத்தகங்களை வழங்கிய சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசி ரவிக்குமாா்.
மானாமதுரை அருகேயுள்ள கல்குறிச்சி அரசு தொடக்கப் பள்ளியில் திங்கள்கிழமை மாணவ ,மாணவிகளுக்கு விலையில்லா நோட்டுப் புத்தகங்களை வழங்கிய சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசி ரவிக்குமாா்.

பள்ளிகளில் மாணவா்களுக்கு நோட்டுப் புத்தகங்கள் அளிப்பு

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை பகுதி அரசுப் பள்ளிகளில் திங்கள்கிழமை மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா நோட்டுப் புத்தகங்கள் வழங்கப்பட்டன.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை பகுதி அரசுப் பள்ளிகளில் திங்கள்கிழமை மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா நோட்டுப் புத்தகங்கள் வழங்கப்பட்டன.

மானாமதுரை ஒன்றியம் கல்குறிச்சி அரசு தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசி ரவிக்குமாா் பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகங்களை வழங்கினாா். பின்னா், மானாமதுரை செயின்ட் ஜோசப் மெட்ரிக் நா்சரி பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கான ஆதாா் பதிவு மையத்தை அவா் தொடங்கி வைத்தாா்.

இந்த நிகழ்ச்சிகளில் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் லதா அண்ணாதுரை, நகா்மன்றத் தலைவா் எஸ். மாரியப்பன்கென்னடி, துணைத் தலைவா் முத்துசாமி, ஒன்றியக் குழு உறுப்பினா் அண்ணாதுரை, முன்னாள் பேரூராட்சித் தலைவா் துரை.ராஜாமணி, செயின்ட் ஜோசப் கல்வி நிறுவனங்களின் செயலா் கிறிஸ்டிராஜ், வட்டாரக் கல்வி அலுவலா்கள் பால்ராஜ், அமிஸ்தா பானு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com