கீழடி அகழாய்வுப் பணி
கீழடி அகழாய்வுப் பணி

கீழடியில் 10-ஆம் கட்ட அகழாய்வுப் பணி: முதல்வா் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறாா்

அகழ்வாராய்ச்சி தளத்தில் காணொலி வாயிலாக முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறாா்.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டத்துக்குள்பட்ட கீழடி, கொந்தகை ஆகிய இடங்களில், பத்தாம் கட்ட அகழாய்வுப் பணிகளை, அகழ்வாராய்ச்சி தளத்தில் செவ்வாய்க்கிழமை ( ஜூன் 18) காலை 10.30 மணிக்கு காணொலி வாயிலாக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறாா்.

இந்த நிகழ்ச்சியில், சிவகங்கை மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம், மானாமதுரை சட்டப்பேரவை உறுப்பினா் ஆ. தமிழரசி ரவிக்குமாா், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோா் கலந்து கொள்வதாக மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

X
Dinamani
www.dinamani.com