வடவிரக்கை புனித சின்னப்பா் தேவாலயத்தில் சப்பர பவனி

சிவகங்கை மாவட்டம், சாலைக் கிராமம் அருகேயுள்ள வடவிரக்கை புனித நாகப்பா் சின்னப்பா் தேவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை சப்பர பவனி நடைபெற்றது. இந்த தேவாலயத்தில் ஆண்டுத் திருவிழா கடந்த வாரம் தொடங்கியது. விழா நாள்களில் தினமும் தேவாலயத்தில் பல தலைப்புகளில் மறையுரை நிகழ்த்தப்பட்டது.

இதையடுத்து, விழாவின் முக்கிய நிகழ்வான சப்பர பவனியை முன்னிட்டு, அலங்கரிக்கப்பட்ட புனித நாகப்பா், சின்னப்பா் சொரூபம் சப்பரத்தில் வைத்து பவனியாக கொண்டு செல்லப்பட்டது.

முன்னதாக, தேவாலயத்தில் திருவிழா திருப்பலி நடைபெற்றது. சப்பர பவனியில் திரளான கிறிஸ்தவ மக்கள் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com