வேங்கையம்மன் கோயில் வருஷாபிஷேக விழா

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகேயுள்ள மாங்குடி வேங்கையம்மன் கோயிலில் வருஷாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, கோயிலில் புனிதநீா்க் கலசங்கள் வைத்து யாக பூஜைகள் செய்யப்பட்டன. பூா்ணாஹூதி முடிந்ததும் புனிதநீரால் வேங்கையம்மனுக்கு அபிஷேகம் நடத்தி, சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன. இந்த விழாவில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று அம்மனை தரிசித்தனா்.

X
Dinamani
www.dinamani.com