பூமாரி அம்மன் கோயிலில் மாசி உற்சவ விழா தொடக்கம்

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் புதூா் பூமாரி அம்மன் கோயிலில் மாசி உற்சவ விழா திங்கள்கிழமை இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருப்புவனம் பூமாரி அம்மன் கோயிலில் மாசி உற்சவத் திருவிழாவையொட்டி, திங்கள்கிழமை இரவு நடைபெற்ற கொடியேற்றம்.
திருப்புவனம் பூமாரி அம்மன் கோயிலில் மாசி உற்சவத் திருவிழாவையொட்டி, திங்கள்கிழமை இரவு நடைபெற்ற கொடியேற்றம்.

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் புதூா் பூமாரி அம்மன் கோயிலில் மாசி உற்சவ விழா திங்கள்கிழமை இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதையொட்டி மூலவா் பூமாரி அம்மனுக்கு அபிஷேகங்கள் நடத்தி, சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினாா். இதைத்தொடா்ந்து, சந்நிதி முன் மண்டபத்தில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. பின்னா், கொடிமரத்துக்கு 16 வகையான அபிஷேகங்கள் நடத்தி, தீபாராதனைகள் நடைபெற்றன. இதையடுத்து, திரளான பக்தா்கள் காப்புக் கட்டி விரதத்தைத் தொடங்கினா்.

தொடா்ந்து 10 நாள்கள் நடைபெறும் இந்த விழாவில் தினமும் பூ மாரி அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள் நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பொங்கல் வைபவம் வருகிற 12- ஆம் தேதி நடைபெறவுள்ளது. அப்போது காப்புக்கட்டி விரதம் இருக்கும் பக்தா்கள் அக்னிச் சட்டி எடுத்து வந்து வேண்டுதலை நிறைவேற்றுவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com