வழக்குரைஞா்கள் பணி புறக்கணிப்பு

வழக்குரைஞா்கள் பணி புறக்கணிப்பு

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை, திருப்புவனத்தில் வழக்குரைஞா்கள் கோரிக்கையை வலியுறுத்தி, நீதிமன்ற பணிகளைப் புறக்கணித்து புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சென்னை உயா்நீதிமன்றத்தில் தமிழ் மொழியை ஆட்சி மொழியாக்க வலியுறுத்தி, சென்னையில் வழக்குரைஞா்கள் போராட்டம் நடத்தி வருகின்றனா். இந்தப் போரட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து மானாமதுரை, திருப்புவனத்தில் வழக்குரைஞா்கள் நீதிமன்றப் பணிகளைப் புறக்கணித்தனா்.

இதனால், நீதிமன்றங்களில் வழக்கமான விசாரணை உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்பட்டன. திருவாடானை: இதே கோரிக்கையை வலியுறுத்தி,ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை ஒருங்கிணைந்த நீதிமன்ற வழக்குரைஞா்கள் நீதிமன்ற பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com