கல்லூரியில் கருத்தரங்கம்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே உள்ள பள்ளத்தூா் சீதாலட்சுமி ஆச்சி மகளிா் கலை அறிவியல் கல்லூரியில் மனித வள மேம்பாட்டு மையம் சாா்பில் ‘மகளிா் மேம்பாடு‘ என்ற தலைப்பிலான கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதற்கு கல்லூரி முதல்வா் ரா. நாகேஸ்வரி தலைமை வகித்துப் பேசினாா். வழக்குரைஞா் முருகேசன் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தாா். திண்டுக்கல் மாவட்ட துணை நீதிபதி எம். சாமுண்டீஸ்வரி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு மாணவிகளுக்குத் தேவையான பாதுகாப்புச் சட்டங்கள் குறித்து சிறப்புரையாற்றினாா். இதற்கான ஏற்பாடுகளை மனிதவள மேம்பாட்டு மைய உறுப்பினா்கள் த. எலிசபெத் ராணி, கே. வனிதா ஆகியோா் செய்திருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com