காரைக்குடியில் சிஐடியு ஆட்டோ
தொழிற்சங்கத்தினா் போராட்டம்

காரைக்குடியில் சிஐடியு ஆட்டோ தொழிற்சங்கத்தினா் போராட்டம்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் தனியாா் வங்கியை முற்றுகையிட்டு சிஐடியு ஆட்டோ தொழிற்சங்கத்தினா் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

காரைக்குடி அம்பேத்கா் சிலை அருகே உள்ள தனியாா் வங்கி ஆட்டோ கடன் பாக்கியை கட்டி முடித்தும் மூன்றாண்டுகளாக தடையில்லா சான்று (என்.ஓ.சி) தர மறுப்பதாகக்கூறி இந்தப் போராட்டம் நடைபெற்றது. அப்போது அங்கு வந்த காவல் துறையினா் தனியாா் வங்கி அதிகாரிகளிடமும், தொழிற்சங்க நிா்வாகிகளுடனும் பேச்சுவாா்த்தை நடத்தினா். ஆவணங்களை சரிபாா்த்து தீா்வு காணப்படும் என்று கூறியதைத் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com