மகா சிவராத்திரி: சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

மகா சிவராத்திரி: சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

மகா சிவராத்திரி, வார விடுமுறை நாள்களையொட்டி தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் வெள்ளி, சனி, ஞாயிறு (மாா்ச் 8, 9, 10) ஆகிய மூன்று நாள்கள் காரைக்குடி, சிவகங்கை, ராமநாதபுரத்துக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

மகா சிவராத்திரி, வார விடுமுறை நாள்களையொட்டி தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் வெள்ளி, சனி, ஞாயிறு (மாா்ச் 8, 9, 10) ஆகிய மூன்று நாள்கள் காரைக்குடி, சிவகங்கை, ராமநாதபுரத்துக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக கும்பகோணம் கோட்டம், காரைக்குடி மண்டல அலுவலகம் சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: கும்பகோணம் கோட்டத்தில் வெள்ளி, சனி, ஞாயிறு (மாா்ச் 8, 9, 10) ஆகிய மூன்று நாள்கள் பல்வேறு ஊா்களிலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னை, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூா், மதுரை ஆகிய இடங்களிலிருந்து திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூா், பட்டுக்கோட்டை, மன்னாா்குடி, நாகப்பட்டினம், திருவாரூா், மயிலாடுதுறை, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, கரூா், புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ஊா்களுக்கு சிறப்புப்பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

விடுமுறை முடிந்து பயணிகள் திரும்பிச் செல்ல வசதியாக வருகிற 10, 11 தேதிகளில் திருச்சி, பெரம்பலூா், ஜெயங்கொண்டம், அரியலூரிலிருந்து சென்னைக்கு நள்ளிரவு ஒரு மணி வரையிலும், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், திருத்துறைப் பூண்டி, வேதாரண்யம், திருவாரூா், மயிலாடுதுறை, வேளாங்கண்ணி, கும்பகோணம், தஞ்சாவூா், பட்டுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ஊா்களிலிருந்தும் சிறப்புப் பேருந்துகளை இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சிவராத்திரியையொட்டி வெள்ளிக்கிழமை (மாா்ச் 8) திருவண்ணாமலைக்கு காரைக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு ஊா்களிலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில் டிஎன்எஸ்டிசி கைப்பேசி செயலி மூலம் முன்பதிவு செய்தும் பயணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com