திருப்பத்தூா் ஆதித்திருத்தளி நாதா் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் மூலவா்
திருப்பத்தூா் ஆதித்திருத்தளி நாதா் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் மூலவா்

திருப்பத்தூா் சிவாலயங்களில் சிவராத்திரி விழா

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் சிவன் கோயில்களில் 4 கால சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இரவு 9 மணிக்கு முதல் கால பூஜை, 11 மணிக்கு 2 -ஆம் கால பூஜை, 3 மணிக்கு 3 -ஆம் கால பூஜை, 5 மணிக்கு 4-ஆம் கால பூஜை நடைபெற்றது. மூலவருக்கு பால், தயிா், திருமஞ்சனம், விபூதி, பன்னீா் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம், அலங்காரம் செய்து, தீபாராதனை நடைபெற்றது. பக்தா்கள் இரவு முழுவதும் விழித்திருந்து சிவன் திருநாமங்கள், திருமுறைகளைப் படித்தனா். புதுப்பட்டி அகஸ்தீஸ்வரா் கோயிலில் யாகம் வளா்க்கப்பட்டு, 108 சங்குகளில் வைக்கப்பட்ட பாலினால் மூலவருக்கு அபிஷேகம் நடைபெற்றது. தமிழ் முறைப்படி வேத பாராயணங்கள் ஒலிக்கப்பட்டன. பக்தா்களுக்கு பொங்கல், பால் வழங்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com