மட்டிக்கரைப்பட்டி கண்மாயில் சனிக்கிழமை நடைபெற்ற மீன்பிடித் திருவிழா.
மட்டிக்கரைப்பட்டி கண்மாயில் சனிக்கிழமை நடைபெற்ற மீன்பிடித் திருவிழா.

மட்டிக்கரைப்பட்டி மீன்பிடித் திருவிழா

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே மட்டிக்கரைப்பட்டி கிராமத்தில் சனிக்கிழமை மீன்பிடித் திருவிழா நடைபெற்றது. மட்டிக்கரைப்பட்டி கண்மாயில் மழை, விவசாயம் செழிக்கவும் வேண்டி இலவசமாக மீன்களைப் பிடித்துச் செல்ல சுற்றுப்புற கிராம மக்களுக்கு அறிவிப்பு செய்யப்பட்டது. இதையடுத்து, சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து கூடிய மக்கள் ஊத்தா, கச்சா, கொசுவலை, பரி, கூடை முதலியவற்றுடன் காலை 6 மணியளவில் கண்மாய்க்குள் இறங்கி, மீன்களைப் போட்டி போட்டுக் கொண்டு பிடித்தனா். இதில் சிலேபி, விரால், கெண்டை, குரவை உள்ளிட்ட மீன்கள் கிடைத்ததால் கிராம மக்கள் மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com