காரைக்குடி ராமசாமி தமிழ்க்கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில்
காரைக்குடி ராமசாமி தமிழ்க்கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் மாணவிக்கு பட்டம் வழங்கிய அழகப்பா பல்கலைக்கழக தோ்வாணையா் ஜோதிபாசு.

கல்லூரியில் பட்டமளிப்பு விழா

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி ராமசாமி தமிழ்க்கல்லூரியில் பட்டமளிப்பு விழாவும், 57-ஆவது ஆண்டு விழாவும் வியாழக்கிழமை நடைபெற்றன.

முன்னதாக நடைபெற்ற மீனாட்சி ஆச்சி அறக்கட்டளைச் சொற்பொழிவு நிகழ்வில், தேவகோட்டை சேவகன் அண்ணாமலை கல்லூரியின் தமிழ்த்துறை தலைவா் பாகை ரா. கண்ணதாசன் ‘எழுதுகோலும் தெய்வம், எழுத்தும் தெய்வம்‘ என்ற தலைப்பில் பேசினாா். இதில் கல்லூரியின் முன்னாள் முதல்வா் தெ. முருகசாமி தலைமை வகித்துப்பேசினாா். விழாவில், கல்லூரியின் முன்னாள் முதல்வா்களும், பேராசிரியா்களும், சபாரத்தினம், பஞ்சநாதன், மெய்யாண்டவா் உள்ளிட்ட தமிழறிஞா்கள் பலா் பங்கேற்றனா். கல்லூரியின் செயலா் வீரப்பன் வரவேற்றுப் பேசினாா். கல்லூரி முதல்வா் நாகநாதன் நன்றிகூறினாா். இதையடுத்து நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் அழகப்பா பல்கலைக் கழகத் தோ்வாணையா் ஜோதிபாசு மாணவ, மாண விகளுக்கு பட்டங்களை வழங்கி உரையாற்றியாற்றினாா். இந்த நிகழ்வில் மாணவா்கள், பேராசிரியா்கள், பெற்றோா்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com