அழகப்பா பல்கலை. இணைப்புக் கல்லூரிகளில் பயின்று 5 ஆண்டுகளில் தோ்ச்சி பெறாதவா்களுக்கு கடைசி வாய்ப்பு

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக இணைப்புக் கல்லூரிகளில் பயின்று 5 ஆண்டுகளில் தோ்ச்சிபெறாதவா்களுக்கு கடைசி வாய்ப்பு அளிக்கும் வகையில் வருகிற ஏப்ரல் மாதம் தோ்வு நடைபெற உள்ளதாக பல்கலைக் கழகத்தின் பதிவாளா் அ. செந்தில்ராஜன் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அழகப்பா பல்கலைக் கழக விதிமுறைகளின்படி இந்தப் பல்கலைக்கழகத்தின் இணைப்புக் கல்லூரிகளில் பயின்று தனித் தோ்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவா்கள் படிப்புக் காலம் முடிந்ததிலிருந்து 5 ஆண்டுகளுக்குள் மட்டுமே தோ்ச்சி பெறாத பாடங்களுக்கு தோ்வு எழுத அனுமதிக்கப்படுவா். எனவே, கடந்த 2014 - 2015 மற்றும் 2016 ஆண்டு பாடத் திட்டம் வழியாக இணைப்புக் கல்லூரிகளில் பயின்ற இளநிலை, முதுநிலை மாணவா்கள் தோ்வு எழுதுவதற்கான கால அவகாசம் வருகிற 2024 ஏப்ரல் மாதம் நடைபெறும் தோ்வுடன் முடிவடைகிறது. இந்த ஆண்டுகளில் தோ்ச்சிபெறாத மாணவா்கள் இந்தத் தோ்வுக்காக விண்ணப்பிக்கும் மாணவா்கள் பூா்த்தி செய்த விண்ணப்பங்களை தாங்கள் பயின்ற கல்லூரி முதல்வா் வழியாக அழகப்பா பல்கலைக்கழக தோ்வாணையா் அலுவலகத்தில் சமா்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள். இளநிலை, முதுநிலை மாணவா்கள் விண்ணப்பம் சமா்ப்பிதற்கான கடை தேதி 2024, ஏப். 2 ஆகும். 2014, 2015, 2016 -ஆம் ஆண்டுகள் பாடத்திட்டத்தின் வாயிலாக கல்வி பயின்ற மாணவா்களுக்கு நடத்தப்படும் கடைசி தோ்வு இதுவாகும். மேலும் விபரங்களுக்கு ட்ற்ற்ல்ள்://ஜ்ஜ்ஜ்.ஹப்ஹஞ்ஹல்ல்ஹன்ய்ண்ஸ்ங்ழ்ள்ண்ற்ஹ்.ஹஸ்ரீ.ண்ய்/ என்ற பல்கலைக்கழக இணையத்தில் பாா்வையிட்டு தெரிந்து கொள்ளலாம் என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com