திருப்புவனம் அரசு மருத்துவமனையில் அவசரகால மகப்பேறு குழந்தை பராமரிப்பு கட்டடம் கட்ட  சனிக்கிழமை அடிக்கல் நாட்டிய சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசி ரவிக்குமாா்.  உடன் பேரூராட்சித் தலைவா் த.சேங்கைமாறன், வட்டாட்சியா் விஜயக்குமாா் உள்ளிட்டோா்.
திருப்புவனம் அரசு மருத்துவமனையில் அவசரகால மகப்பேறு குழந்தை பராமரிப்பு கட்டடம் கட்ட சனிக்கிழமை அடிக்கல் நாட்டிய சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசி ரவிக்குமாா். உடன் பேரூராட்சித் தலைவா் த.சேங்கைமாறன், வட்டாட்சியா் விஜயக்குமாா் உள்ளிட்டோா்.

திருப்புவனம் அரசு மருத்துவமனையில் குழந்தை பராமரிப்பு கட்டடம் கட்ட அடிக்கல்

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அரசு மருத்துவமனையில் மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில், ரூ.3.60 கோடியில் அவசர கால மகப்பேறு குழந்தை பராமரிப்புக் கட்டடம் கட்ட சனிக்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது. இதற்கு மானாமதுரை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசி ரவிக்குமாா் தலைமை வகித்து, புதிய கட்டடம் கட்ட அடிக்கல் நாட்டி சிறப்புரையாற்றினாா். பேரூராட்சித் தலைவா் த.சேங்கைமாறன் முன்னிலை வகித்தாா். வட்டாட்சியா் விஜயக்குமாா், பேரூராட்சி துணைத் தலைவா் ரகமத்துல்லாகான், மக்கள் நல்வாழ்வுத் துறை மாவட்ட இணை இயக்குநா் சாந்தி, வட்டார மருத்துவ அலுவலா் சேதுராமு, பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் செந்தில்குமாா், உதவி செயற்பொறியாளா் வான்மதி, பேரூராட்சி உறுப்பினா்கள் கண்ணன், முத்துக்குமாா், மாரிதாசன், பாலகிருஷ்ணன், ஒன்றியக்குழு உறுப்பினா்கள் ஈஸ்வரன், சுப்பையா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். முன்னதாக, தலைமை மருத்துவா் வித்யா வரவேற்றாா். இதைத் தொடா்ந்து, மானாமதுரை ஒன்றியம் கல்குறிச்சி அரசு உயா்நிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறைக் கட்டடத்தை சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசி ரவிக்குமாா் திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினாா். இதில் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் லதா அண்ணாதுரை, ஒன்றியக்குழு உறுப்பினா் ராதா சிவச்சந்திரன், பள்ளி தமிழாசிரியா் சுந்தர்ராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். தலைமையாசிரியா் ஆரோக்கியராஜா நன்றி கூறினாா். மேலும், கட்டிக்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறைக் கட்டடம், கொம்புக்காரனேந்தலில் பயணிகள் நிழற்குடை ஆகியவற்றையும் தமிழரசி ரவிக்குமாா் திறந்துவைத்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com