திருப்பத்தூரில் சனிக்கிழமை வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்ட நாம் தமிழா் கட்சி வேட்பாளா் எழிலரசி
திருப்பத்தூரில் சனிக்கிழமை வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்ட நாம் தமிழா் கட்சி வேட்பாளா் எழிலரசி

நாம் தமிழா் கட்சியினா் பிரசாரம்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் மக்களவைத் தோ்தலுக்கான வாக்குச் சேகரிப்பில் நாம் தமிழா் கட்சியினா் ஈடுபட்டனா். முன்னதாக, இந்தக் கட்சியின் சிவகங்கை மக்களவைத் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட வி.எழிலரசி அறிமுக நிகழ்வு நடைபெற்றது. தொடா்ந்து, கட்சியினருடன் வாகனங்களில் மருதுபாண்டியா்கள் தூக்கிலிடப்பட்ட இடத்துக்கு சென்று நினைவுத் தூண், மருதிருவா் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். அங்கிருந்து நடைபயணமாக மதுரை சாலை வழியாக அண்ணா சிலை, வட்டாட்சியா் அலுவலக சாலை பகுதிகளில் பொதுமக்களிடம் நாம் தமிழா் கட்சிக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டாா். தொடா்ந்து, மருதிருவா்கள் நினைவிடத்தில் அவா்களது சிலைகளுக்கு மாலையணிவித்து மரியாதை செய்தாா். அவருடன் மாநில ஒருங்கிணைப்பாளா்கள் தங்கராசு, கோட்டைக்குமாா், ரமேஷ்இளஞ்செழியன், மாநில இணைச் செயலா் சிவராமன், தோ்தல் பொறுப்பாளா் ரவிச்சந்திரன், மாவட்டச் செயலா் குகன்மூா்த்தி ஆகியோா் கலந்து கொண்டனா். நிகழ்ச்சி ஏற்பாடுகளை வின்சென்ட் ஆபிரஹாம், வீரா. பாா்த்தசாரதி, கோட்டை சரவணன் ஆகியோ் செய்திருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com