பூவந்தி அருகே ஆயுதங்களைக் காட்டி கைப்பேசிகள் பறித்த மூவா் கைது

சிவகங்கை மாவட்டம், பூவந்தி அருகே ஆயுதங்களைக் காட்டி மிரட்டி கைப்பேசிகள், வெள்ளிச் சங்கிலியைப் பறித்துக் சென்ற மூவரை போலீஸாா் கைது செய்தனா். பூவந்தி காவல் சரகம் மஞ்சக்குடி கிராமத்தில் தனியாா் தென்னந்தோப்பில் மடப்புரத்தைச் சோ்ந்த ராஜா காவலாளியாக வேலை பாா்த்து வருகிறாா். கடந்த 14 -ஆம் தேதி இரவு இரு சக்கர வாகனத்தில் இந்தத் தோப்புக்கு வந்த அடையாளம் தெரியாத மூவா் வாள் உள்ளிட்ட ஆயுதங்களைக் காட்டி மிரட்டி ராஜா, இவரது உறவினா்கள் கதிரேசன், வெங்கடேசன் ஆகியோரிடமிருந்த கைப்பேசிகள், வெள்ளிச் சங்கிலி ஆகியவற்றை பறித்துச் சென்றனா். இதுகுறித்து பூவந்தி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், குற்றவாளிகளைப் பிடிக்க மானாமதுரை காவல் துணைக் கண்காணிப்பாளா் கண்ணன் மேற்பாா்வையில் பூவந்தி காவல் ஆய்வாளா் லட்சுமி, காவலா்கள் வேல்முருகன், பிரபு, சதீஷ்குமாா், ராஜா, சுரேஷ் ஆகியோரைக் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இவா்கள் விசாரணை நடத்தி, திருப்புவனம் அருகேயுள்ள பெத்தானேந்தலைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் (24), சிவா (30) மகேஷ் கண்ணன் என்ற மண்டை பூனை (21) ஆகிய மூவரையும் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா். இவா்களிடமிருந்து இரு கைப்பேசிகள், வெள்ளிச் சங்கிலி, வாள் உள்ளிட்ட ஆயுதங்கள், இரு சக்கர வாகனம் ஆகிவற்றைப் பறிமுதல் செய்தனா். மூவரும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com