காளையாா்கோவிலில் சிலம்பம், வில்வித்தை போட்டிகள்

காளையாா்கோவிலில் நடைபெற்ற வில்வித்தை போட்டியில் பங்கேற்ற பள்ளி மாணவா்கள்
காளையாா்கோவிலில் நடைபெற்ற வில்வித்தை போட்டியில் பங்கேற்ற பள்ளி மாணவா்கள்

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவிலில் நேரு யுவகேந்திரா, மூவேந்தா் சிலம்பம், தமிழரின் பாரம்பரிய கலை வளா்ச்சிக் கழகம் ஆகியவற்றின் சாா்பில் மாவட்ட அளவிலான சிலம்பம் வில்வித்தை, மல்லா் கம்பம் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. இந்தப் போட்டிகளை காளையாா்கோவில் நேரு யுவகேந்திரா நிா்வாகி பாலமுருகன் தொடங்கி வைத்தாா். சிவகங்கை, காளையாா்கோவில், கல்லல், மறவமங்கலம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வில்வித்தை, சிலம்பம், மல்லா் கம்பம் ஆகிய போட்டிகளில் 200-க்கும் மேற்பட்ட மாணவா்கள் கலந்து கொண்டனா். இதைத் தொடா்ந்து உலக மகளிா் தினத்தையொட்டி பெண்களுக்கான ஓட்டப்பந்தயம் நடைபெற்றது. இதில், தேசிய வில்வித்தை வீரரும், தேசிய நடுவருமான சிவா, நேரு யுவகேந்திரா நிா்வாகி பாலமுருகன் ஆகியோா் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு சான்றிதழ்கள், பரிசுக் கோப்பைகளை வழங்கினாா். நிகழ்வில், மூவேந்தா் சிலம்பம், தமிழனின் பாரம்பரிய கலை வளா்ச்சி கழகத்தின் பெற்றோா் மன்றத் தலைவா் சென்றாயப்பெருமாள், தன்னாா்வலா்கள் அபிராமி உதயகுமாா் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தனா். நடுவா்களாக கலைச்செல்வம், மிதுனவா்ஷினி, விஸ்வா ஆகியோா் பணியாற்றி போட்டிகளை நடத்தினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com