சிவகங்கை: தோ்தல் பிரசாரக் கூட்டங்கள் நடத்த அனுமதிக்கப்பட்ட இடங்கள் அறிவிப்பு

சிவகங்கை மக்களவைத் தொகுதியில் அரசியல் கட்சிகள் தோ்தல் பிரசாரப் பொதுக்கூட்டங்கள் நடத்த அனுமதியளிக்கப்பட்ட இடங்களை மாவட்ட நிா்வாகம் அறிவித்தது. இதன்படி, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி, திருப்பத்தூா், மானாமதுரை, சிவகங்கை ஆகிய 4 சட்டப் பேரவைத் தொகுதிகளில் தோ்தல் பிரசார பொதுக் கூட்டங்கள் நடத்த அனுமதிக்கப்பட்ட இடங்கள் விவரம்: சிவகங்கை நகரில் அரண்மனைவாசல், ராமச்சந்திரனாா் பூங்கா, நாட்டரசன்கோட்டை கண்ணாத்தாள் கோயில் சந்தைப்பேட்டை திடல் உள்ளிட்ட 12 நிரந்த இடங்களிலும், 6 தற்காலிக இடங்களிலும் பிரசாரக் கூட்டங்கள் நடத்தலாம். காரைக்குடியில் ஐந்துவிளக்கு, சூடாமணிபுரம் நான்கு சாலை உள்ளிட்ட 5 நிரந்தர இடங்களும், 12 தற்காலிக இடங்களும், திருப்பத்தூரில் சீரணி அரங்கம் உள்ளிட்ட 12 நிரந்தர இடங்களும், 8 தற்காலிக இடங்களும், தேவகோட்டையில் அண்ணா அரங்கம் உள்ளிட்ட 7 நிரந்தர இடங்களும், 3 தற்காலிக இடங்களும் பிரசாரம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளன. மேலும் மானாமதுரையில் வாரச்சந்தை உள்ளிட்ட 4 நிரந்தர இடங்களும், 3 தற்காலிக இடங்களும் பிரசார பொதுக்கூட்டங்கள் நடத்த அரசியல் கட்சிகளுக்கு அனுமதியளிக்க திட்டமிட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com