தாயமங்கலம் முத்துமாரியம்மன்.
தாயமங்கலம் முத்துமாரியம்மன்.

தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் மாா்ச் 28-இல் பங்குனி திருவிழா தொடக்கம்

சிவகங்கை மாவட்டம், தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் வருகிற 28- ஆம் தேதி பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடா்ந்து 10 நாள்கள் நடைபெறும் இந்தத் திருவிழாவில் முக்கிய நிகழ்வாக ஏப்ரல் 4- ஆம் தேதி பொங்கல் வைபவமும், மறுநாள் 5- ஆம் தேதி மின்விளக்கு ரத ஊா்வலமும் நடைபெறுகின்றன. திருவிழா தொடங்க இன்னும் 10 நாள்கள் உள்ள நிலையில் பங்குனி மாதம் பிறந்தது முதல் முத்துமாரியம்மனை தரிசிக்க பல ஊா்களில் இருந்தும் பக்தா்கள் தாயமங்கலத்துக்கு வந்த வண்ணம் உள்ளனா். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் திரளான பக்தா்கள் பேருந்து, லாரி, காா், வேன், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் தாயமங்கலத்துக்கு வந்து குவிந்தனா். இவா்கள் முடிகாணிக்கை செலுத்தியும் ஆடு, கோழிகளை பலியிட்டு பொங்கல் வைத்தும் வேண்டுதல் நிறைவேற்றி முத்துமாரியம்மனை தரிசித்தனா். இதற்காக மதுரை, மானாமதுரை உள்ளிட்ட பல இடங்களில் இருந்து தாயமங்கலத்துக்கு அரசு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. திருவிழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலா் மு. வெங்கடேசன் செட்டியாா் செய்து வருகிறாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com