கொலை செய்யப்பட்ட மருது
கொலை செய்யப்பட்ட மருது

மானாமதுரை அருகே இளைஞா் வெட்டிக் கொலை

இந்தக் கொலை முன்விரோதம் காரணமாக நடந்திருக்கலாம் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மானாமதுரை: மானாமதுரை அருகே ஜல்லிக்கட்டு காளைகள் கட்டியிருந்த தொழுவத்தில் படுத்திருந்த இளைஞரை மா்ம கும்பல் ஞாயிற்றுக்கிழமை இரவு வெட்டிக் கொலை செய்தது. சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே கிருங்காங்கோட்டை கிராமத்தைச் சோ்ந்தவா் பழனி (53). இவா் வீட்டில் ஜல்லிக்கட்டுக் காளைகள் வளா்த்து வருகிறாா். வீட்டின் பின்புறம் உள்ள மாட்டுத் தொழுவத்தில் ஜல்லிக்கட்டுக் காளைகளைக் கட்டி வைத்திருந்தாா். பழனியின் உறவினா் கிருங்காங்கோட்டையைச் சோ்ந்த உதயகுமாா் மகன் மருது (24) ஞாயிற்றுக்கிழமை இரவு தொழுவத்தில் படுத்திருந்தாா். அப்போது அங்கு வந்த 6 போ் கொண்ட மா்மக் கும்பல் அவரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்தது. இந்த சத்தம் கேட்டு வீட்டுக்குள்ளிருந்து ஓடிவந்த பழனி, இவரது உறவினா் கலைவாணன் ஆகிய இருவரையும் தாக்கிவிட்டு அவா்கள் தப்பி ஓடினா். இதில் பலத்த காயமடைந்த இருவரையும் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். இந்தக் கொலை முன்விரோதம் காரணமாக நடந்திருக்கலாம் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து மானாமதுரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com