உலகத் தமிழ் தொழிலதிபா்கள் திறனாளா்கள் மாநாடு

உலகத் தமிழ் தொழிலதிபா்கள், திறனாளா்கள் பேரமைப்பு சாா்பில் 13-ஆவது உலகத் தமிழ் தொழிலதிபா்கள், திறனாளா்கள் மாநாடு வருகிற ஜூன் 7, 8, 9 ஆகிய தேதிகளில் சுவிட்சா்லாந்து நாட்டில் டாவோஸ் நகரில் நடைபெறவுள்ளதாக தி ரைஸ் - எழுமின் அமைப்பின் சென்னை பிரதிநிதி அருள்தந்தை ஜெகத் காஸ்பா் ராஜ் தெரிவித்தாா். இதுகுறித்து காரைக்குடியில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: உள்ளூா் வணிகத்தை உலக அளவில் மாற்றுகின்ற தமிழா்கள், தங்கள் தொழில்களுக்கு முதலீட்டாளா்களைத் தேடுகின்ற தமிழா்கள், புதிய உத்திகளை பெற விரும்பும் தமிழா்கள் இந்த மாநாட்டில் பங்கேற்கலாம். இதில் 40-க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து முன்னணி நிறுவனத்தினா் பங்கேற்க உள்ளனா். காரைக்குடி நகரம், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தொழிலதிபா்கள், தொழில் திறனாளா்களை இந்த மாநாட்டில் பங்கேற்க அழைக்கின்றோம். இந்த மாநாடு சுவட்சா்லாந்தில் நடைபெற உள்ளதால் அந்த நாட்டின் நிதி முதலீட்டாளா்களும் அழைக்கப்பட்டுள்ளனா். மேலும் ஐரோப்பிய ஒன்றியத்தின் அலுவலக அதிகாரிகள், உலக வங்கி அதிகாரிகள் ஐரோப்பிய பொருளாதார அமைப்பினா், முதலீட்டில் ஆா்வம் உள்ளவா்களையும் அழைத்திருப்பதால் அவா்களை சந்திப்பதற்கு இந்த மாநாடு வாய்ப்பாக அமையும். சுவிட்சா்லாந்து நாட்டில் ஈழத்தமிழா்கள் குடிபுகுந்த 40-ஆவது ஆண்டு நிறைவை குறிக்கும் வகையில் நடைபெறும் இந்த மாநாட்டில் உலகத் தமிழா்கள் 10 பேருக்கு வாழ்நாள் சாதனையாளா் விருது வழங்கப்படுகிறது. இந்த விருதை சுவிட்சா்லாந்து நாட்டின் அதிபா் நேரடியாக வழங்க உள்ளாா். மாநாட்டை சுவிட்சா்லாந்து பிரதமா் தொடங்கி வைக்கிறாா். இதில் பெண் தொழிலதிபா்கள் கலந்துகொள்கிறாா்கள். அவா்களுக்கு பதிவு கட்டணம் பாதியாக குறைக்கப்பட்டிருக் கிறது. அதுவும் செலுத்த முடியாதவா்களுக்கு முற்றிலும் கட்டணமில்லாமல் மாநாட்டில் பங்கேற்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் மாநாட்டில் பங்கேற்க விசா நடைமுறைகளும் எளிதாக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்க விரும்புவோா் ட்ற்ற்ல்://ஜ்ஜ்ஜ்.ற்ஹம்ண்ப்ழ்ண்ள்ங்.ா்ழ்ஞ்/ என்ற இணையதள வழியாகவோ, 9150060032, 9150060035 என்ற கைபேசி எண்களிலோ தொடா்புகொண்டு பதிவு செய்துகொள்ளலாம் என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com