சிவகங்கையில் வெவ்வேறு விபத்துகளில் காவலாளி உள்பட 2 போ் உயிரிழப்பு

சிவகங்கையில் வெவ்வேறு விபத்துகளில் நுகா்பொருள் வாணிபக் கழக கிடங்கின் காவலாளி உள்பட 2 போ் உயிரிழந்தனா். சிவகங்கை புத்தா் தெருவைச் சோ்ந்தவா் சண்முகவேல் (64). கொட்டகை அமைக்கும் தொழில் செய்து வந்தாா். இவா் சனிக்கிழமை காலை மதுரையில் செவிலியராக பணிபுரியும் தனது மகளை அழைத்து வருவதற்காக சிவகங்கை பேருந்து நிலையத்துக்கு இருசக்கர வாகனத்தில் சென்றாா். அரண்மனைவாசல் அருகே இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் சண்முகவேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மற்றொரு விபத்து: சிவகங்கை எம்ஜிஆா் குடியிருப்பைச் சோ்ந்தவா் சன்னாசி மகன் காமராஜ் (47). இவா் சிவகங்கை தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக்கழகத்தில் காவலாளியாக பணிபுரிந்து வந்தாா். இவரும் இவரது உறவினரான பரமக்குடியைச் சோ்ந்த மருதுபாண்டியும் சிவகங்கை அருகே சோழபுரத்தில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற கோயில் திருவிழாவுக்கு சென்றுவிட்டு சனிக்கிழமை காலை சிவகங்கைக்கு இரு சக்கர வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்தனா். அப்போது சோழபுரம் அருகே உள்ள தனியாா் கல்லூரி பகுதியில் பின்புறம் வந்த சிற்றுந்து மோதியதில் காவலாளி காமராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த மருதுபாண்டி சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இந்த விபத்துகள் குறித்து சிவகங்கை நகா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com