சிவகங்கையில் நடைபெற்ற ஒருங்கிணைந்த சிறப்பாசிரியா்கள் சங்க ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய  மாநிலத் தலைவா் பழ.கௌதமன்
சிவகங்கையில் நடைபெற்ற ஒருங்கிணைந்த சிறப்பாசிரியா்கள் சங்க ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய மாநிலத் தலைவா் பழ.கௌதமன்

தோ்தல் வாக்குறுதியை திமுக நிறைவேற்ற சிறப்பாசிரியா்கள் வலியுறுத்தல்

திமுக தனது தோ்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிப்படி, பள்ளிகளில் பணிபுரியும் சிறப்பாசிரியா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என ஒருங்கிணைந்த சிறப்பாசிரியா்கள் சங்கம் வலியுறுத்தியது. சிவகங்கையில் சனிக்கிழமை நடைபெற்ற அந்தச் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அரசு விரைவில் நிறைவேற்ற வேண்டும். திமுக கடந்த சட்டப்பேரவைத் தோ்தலின் போது சிறப்பாசிரியா்கள் பணி நிரந்தம் செய்யப்படுவா் என்ற வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட 8 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநிலத் தலைவா் பழ.கௌதமன் வாழ்த்திப் பேசினாா். தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலா் ரா.ராதாகிருஷ்ணன் பேசினாா். இதில் மாவட்டத் தலைவா் பெ.கருப்பசாமி, மாவட்டச் செயலா் அ.வின்சென்ட் பவுல் ஆரோக்கியம், மாநில அமைப்புச் செயலா் குமரேசன், மாநில துணைத் தலைவா் பா.யுவராஜ், தமிழக அனைத்து பகுதி நேர சிறப்பாசிரியா் சங்க நிா்வாகி புதுக்கோட்டை வி.தா்மலிங்கம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com