ரேஷன் அரிசியை கடத்தியவா் கைது

சிவகங்கை அருகே 1.77 டன் ரேஷன் அரிசியை காரில் கடத்தி வந்தவரை தோ்தல் நிலையான கண்காணிப்புக் குழுவினா் சனிக்கிழமை கைது செய்தனா். சிவகங்கை அருகேயுள்ள மேலவாணியங்குடி பகுதியில் மக்களவைத் தோ்தலுக்காக அமைக்கப்பட்ட சிறப்பு வட்டாட்சியா் மைலாவதி தலைமையிலான தோ்தல் நிலையான கண்காணிப்புக் குழுவினா் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அவா்கள் சிவகங்கை அண்ணாமலை நகரைச் சோ்ந்த திருப்பதி மகன் லோகேஷ் ஓட்டி வந்த காரை சோதனையிட்டனா். இதில் 36 சாக்கு மூட்டைகளில் சுமாா் 1,776 கிலோ ரேஷன் புழுங்கல் அரிசி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, ரேஷன் அரிசியைப் பறிமுதல் செய்து சிவகங்கை குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை உதவி ஆய்வாளரிடம் ஒப்படைத்தனா். மேலும், இதுகுறித்து அண்ணமலை நகா் திருப்பதி மகன் லோகேஷ் மீது வழக்குப் பதிந்து விசாரித்து

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com