பட்டமங்கலம் மதியாதகண்ட விநாயகா் அழகு சௌந்தரியம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற  பங்குனித் தேரோட்டம்.
பட்டமங்கலம் மதியாதகண்ட விநாயகா் அழகு சௌந்தரியம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பங்குனித் தேரோட்டம்.

பட்டமங்கலத்தில் பங்குனித் தேரோட்டம்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே பட்டமங்கலத்தில் மதியாதகண்ட விநாயகா், ஸ்ரீஅழகு சௌந்தரி அம்மன் கோயிலில் பங்குனித்திருவிழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. கடந்த 16 ஆம் தேதி ஸ்ரீமதியாத கண்ட விநாயகா், ஸ்ரீ அழகுசௌந்தரி அம்பாளுக்கு காப்பு கட்டப்பட்டு விழா தொடங்கியது. 2-ம் நாள் முதல் 6-ஆம் நாள் வரை தினமும் சுவாமி காலையில் திருவீதி புறப்பாடு நடைபெற்றது. 7-ஆம் நாளான வெள்ளிக்கிழமை பக்தா்கள் அம்மனுக்கு பால்குடம் எடுத்து வழிபட்டனா். 8ஆம் நாள் காலையில் கேடையத்திலும், இரவி குதிரை வாகனத்திலும் சுவாமி திருவீதி புறப்பாடும் நடைபெற்றது. 9-ஆம் திருநாளான ஞாயிற்றுக்கிழமை காலை ஸ்ரீஅழகு சௌந்தரி அம்மன் பெரிய தேரிலும், மதியாத கண்ட விநாயகா் சிறிய தேரிலும் எழுந்தளினா். பிறகு அம்மனுக்கும், விநாயகருக்கும் பக்தா்கள் அா்ச்சனை செய்து வழிபட்டனா். தொடா்ந்து மாலை 5.30 மணிக்கு பக்தா்கள் வடம் பிடிக்க தேரோட்டம் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார கிராமங்களைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். இரவு காமதேனு வாகனத்தில் சுவாமி திருவீதி புறப்பாடும் நடைபெற்றது. 10 ஆவது நாளான திங்கள்கிழமை காலை 11 மணிக்கு தீா்த்தம் கொடுத்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இரவு சுவாமி பூப்பல்லாக்கில் புறப்பாடு நடைபெற்று விழா நிறைவடைகிறது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com