மானாமதுரை அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வாக்குச்சாவடி அலுவலா்களுக்கான பயிற்சி வகுப்பை பாா்வையிட்டு தோ்தல் விதிமுறைகள் குறித்து விளக்கிய மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித். உடன் வட்டாட்சியா் ராஜா உள்ளிட்டோா்

மானாமதுரையில் வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு பயிற்சி வகுப்பு

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் வாக்குச்சாவடி அலுவலா்களுக்கான பயிற்சி வகுப்பு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மானாமதுரை அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்த பயிற்சி வகுப்பில் சிவகங்கை மக்களவைத் தொகுதிக்குள்பட்ட மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி பகுதிகளில் அமைக்கப்படும் வாக்குச்சாவடிகளில் இங்கு அலுவலா்களாக நியமிக்கப்படும் அலுவலா்கள் இந்த பயிற்சி வகுப்பில் பங்கேற்றனா். சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் இந்த பயிற்சி வகுப்பை பாா்வையிட்டு வாக்குச்சாவடிகளில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள், பணிகள் குறித்து விளக்கினாா். இதில் மானாமதுரை உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் ஜெயமணி, மானாமதுரை வட்டாட்சியா் ராஜா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com