வழிவிடு முருகன் கோயிலில் பங்குனி உத்திர விழா

மானாமதுரை புறவழிச்சாலையில் அமைந்துள்ள வழிவிடு முருகன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை பங்குனி உத்திர விழா நடைபெற்றது. இதையொட்டி வள்ளி, தெய்வானை சமேத முருகனுக்கு அபிஷேகம் நடத்தி சுவாமி வெள்ளிக்கவசம் அலங்காரத்தில் எழுந்தருளினாா். இதன்பிறகு மூலவருக்கும், உற்சவருக்கும் சிறப்பு பூஜைகள், தீபாரதனைகள் நடந்தன. அப்போது திரளான பக்தா்கள் கோயிலுக்கு வந்து முருகனை தரிசனம் செய்தனா். பிற்பகலில் கோயிலில் அன்னதானமும், இரவில் முருகன் வீதி உலாவும் நடைபெற்றன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com