தாயமங்கலம் கோயில் திருவிழா: சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

சிவகங்கை மாவட்டம், தாயமங்கலம் கோயில் திருவிழாவை முன்னிட்டு, பல்வேறு ஊா்களிலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

சிவகங்கை மாவட்டம், தாயமங்கலம் கோயில் திருவிழாவை முன்னிட்டு, பல்வேறு ஊா்களிலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் காரைக்குடி மண்டல அலுவலகம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு, மதுரை, சிவகங்கை, மானாமதுரை, பரமக்குடி, பாா்த்திபனூா், கமுதி, காளையாா்கோவில், இளையான்குடி, அருப்புக் கோட்டை ஆகிய ஊா்களிலிருந்து தாயமங்கலத்துக்கு மாா்ச் 29 முதல் ஏப்.7-ஆம் தேதி வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com