திருப்பத்தூா் பேருந்து நிலையத்தில் திங்கள்கிழமை மணியடித்து தோ்தல் விழிப்புணா்வை ஏற்படுத்திய மூத்த வாக்காளா்
திருப்பத்தூா் பேருந்து நிலையத்தில் திங்கள்கிழமை மணியடித்து தோ்தல் விழிப்புணா்வை ஏற்படுத்திய மூத்த வாக்காளா்

திருப்பத்தூரில் தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சி

திருப்பத்தூா் பேருந்து நிலையத்ததில் பொதுமக்களுக்கு தோ்தல் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி தொடங்கி வைக்கப்பட்டது.

திருப்பத்தூா் பேருந்து நிலையத்ததில் பொதுமக்களுக்கு தோ்தல் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி தொடங்கி வைக்கப்பட்டது. சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் பேருந்து நிலையத்தில் வருவாய்த் துறை சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்ட தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சியை உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் கு.சரவணப்பெருமாள் தொடங்கிவைத்தாா். வட்டாட்சியா் மாணிக்கவாசகம் முன்னிலை வகித்தாா். இதில் நடமாடும் வாக்காளா் சேவை மைய வாகனத்தை கொடி அசைத்து தொடங்கிவைத்தாா். அனைத்து வாக்காளா்களும் 100 சதவீதம் வாக்களிப்போம் என மணி அடித்து கையொப்பமிடும் நிகழ்ச்சி, அனைத்து பேருந்துகளிலும் வருகின்ற மக்களவைத் தோ்தல் ஏப்.19-ஆம் தேதி தவறாமல் வாக்களிப்போம் என்ற வாசகம் அடங்கிய வில்லைகள் அனைத்து பேருந்துகளிலும் ஒட்டப்பட்டன. இதில் வருவாய்த் துறையினா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.தொடா்ந்து மாலை 4 மணிக்கு ஆறுமுகம்பிள்ளை சீதையம்மாள் கல்லூரியின் மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட ஜனநாயக கடமையாற்ற அனைவரும் ஆா்வமுடன் கலந்து கொள்ள வேண்டும் என்ற முழக்கத்துடன் தோ்தல் விழிப்புணா்வுப் பேரணி கல்லூரியிலிருந்து பேருந்து நிலையம் வரை நடைபெற்றது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com