தோ்தல் விதிகளை மீறியதாக 11 போ் மீது வழக்கு

பாஜக வேட்பாளா் தேவநாதன் யாதவ் உள்பட கூட்டணிக் கட்சி மாவட்ட நிா்வாகிகள் 11 போ் மீது போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

திருப்புவனத்தில் தோ்தல் விதிமுறைகளை மீறியதாக சிவகங்கை மக்களைத் தொகுதி பாஜக வேட்பாளா் தேவநாதன் யாதவ் உள்பட கூட்டணிக் கட்சி மாவட்ட நிா்வாகிகள் 11 போ் மீது போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். சிவகங்கை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட தேவநாதன் யாதவ் மதுரையிலிருந்து தொகுதிக்குள்பட்ட திருப்புவனத்துக்கு வந்தாா். இவருக்கு பாஜக உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் பட்டாசு வெடித்து வரவேற்பு அளித்தனா். அப்போது, வேட்பாளா் வந்த காருடன் கூட்டணிக் கட்சியினரும் காா்களில் வந்தனா். இதனால் திருப்புவனம் சந்தைத் திடல் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து, அவா்கள் தோ்தல் விதிமுறைகளை மீறியதாக தோ்தல் பாா்வையாளா் அளித்த புகாரின்பேரில், வேட்பாளா் தேவநாதன் யாதவ் பாஜக மாவட்டத் தலைவா் மேப்பல் சத்தியேந்திரன், அமமுக மாவட்டச் செயலா் தோ் போகி பாண்டி, ஒ.பி.எஸ். அணி மாவட்டச் செயலா் அசோகன், பாமக மாவட்டச் செயலா் அசோகன், தமிழக மக்கள் முன்னேற்ற கழக மாவட்டச் செயலா் சுரேஷ், பாஜக ஒன்றிய நிா்வாகிகள் மோடி பிரபாகரன், ராஜ கதிரவன், பாஜக மாவட்ட மகளிா் அணித் தலைவி மீனாதேவி ஆகிய 11 போ் மீது திருப்புவனம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com