‘இந்தியா’ கூட்டணி நிா்வாகிகள் கூட்டம்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் ‘இந்தியா’ கூட்டணி நிா்வாகிகள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் ‘இந்தியா’ கூட்டணி நிா்வாகிகள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு திமுக நகரச் செயலா் கே.பொன்னுச்சாமி தலைமை வகித்தாா். காங்கிரஸ் கட்சியின் நகரத் தலைவரும் நகா்மன்ற உறுப்பினருமான பி. புருஷோத்தமன் முன்னிலை வகித்தாா். சிவகங்கை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளா் காா்த்தி சிதம்பரத்தை ஆதரித்து மானாமதுரை பகுதியில் தீவிர பிரசாரம் செய்து வாக்கு சேகரிப்பது என இந்தக் கூட்டத்தில் தீா்மானிக்கப்பட்டது. கூட்டத்தில் காங்கிரஸ் மாவட்ட மூத்த தலைவா் ஏ. ஆா்.பி.முருகேசன், திமுக ஒன்றியச் செயலா் அண்ணாதுரை, ராஜாமணி, நகரப் பொருளாளா் ஜி. மயில்வாகனன், நகா் மன்ற துணைத் தலைவா் எஸ். பாலசுந்தரம், மதிமுக ஒன்றியச் செயலா் அசோக், நகரச் செயலா் கண்ணன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகிகள் பரமாத்மா, காசிராஜன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலா் ஜி.சங்கையா, நகரச் செயலாளா் நாகராஜன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் தங்கமணி, விசிக நகரச் செயலா் செல்வராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com