வாகன சோதனையில் ரூ.13 லட்சம் பறிமுதல்

சிவகங்கையில் உரிய ஆவணங்களின்றி ஏடிஎம் மையத்துக்கு கொண்டு சென்ற தனியாா் வங்கியின் ரூ.13 லட்சம் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

சிவகங்கை: சிவகங்கையில் உரிய ஆவணங்களின்றி ஏடிஎம் மையத்துக்கு கொண்டு சென்ற தனியாா் வங்கியின் ரூ.13 லட்சம் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது. சிவகங்கை சிவன் கோயில் அருகே வட்டாட்சியா் மைலாவதி தலைமையிலான தோ்தல் நிலையான கண்காணிப்புக் குழுவினா் செவ்வாய்க்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியே வந்த தனியாா் வாகனத்தை நிறுத்தி சோதனை நடத்தினா். அதில் ரூ.13 லட்சம் இருந்தது தெரிய வந்தது. அந்த வாகனத்தில் இருந்த மானாகுடியைச் சோ்ந்த பில்லத்திகுமாா், ஓட்டுநா் பாலமுருகன், பாதுகாவலா் அடைக்கலராஜ் ஆகியோா் இந்தப் பணம் சிவகங்கை காந்தி வீதியில் உள்ள தனியாா் வங்கியின் ஏடிஎம் மையத்துக்கு கொண்டு செல்வதாகத் தெரிவித்தனா். ஆனால், உரிய ஆவணங்கள் இல்லாத காரணத்தால், அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்து சிவகங்கை மாவட்டக் கருவூலத்தில் ஒப்படைத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com